Friday, August 9, 2013

நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள்  அமைக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊட்டி; "நீலகிரி மாவட்டத்தில் தற்போது தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்து, பராமரிக்க, உதகை நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது  இவை முறையாக பராமரிக்க லாப நோக்கமின்றி  பராமரிப்பு பணியை  தன்னார்வ அமைப்புகளிடம் வழங்கலாம்' என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய, மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் "அவசர' தேவையை நிறைவேற்ற, அரசு, மாநகராட்சி, உள்ளாட்சி மன்றங்கள் மூலம் கட்டண கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன;  இதை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள், குத்தகை ஒப்பந்தத்தை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், மறைவிடங்கள் பல, திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்படுகின்றன; சுகாதார சீர்கேட்டால், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி மற்றும் போக்குவரத்து கழகம் மூலம் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களில், மூன்று  ரூபாய் முதல் ஐந்து   ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  ஆத்திரமடையும் சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஏ.டி.சி., அருகில் மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலை, எச்.ஏ.டி.பி., அரங்கம் செல்லும் சாலை, பஸ் ஸ்டாண்ட் சாலை,  மாவட்ட கலெக்டர் அலுவலகப்  பகுதி உதகை சேட் மருத்துவ மனை மார்க்கெட் மற்றும் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள மறைவிடங்கள் உட்பட பல இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது;

இந்நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம், நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், முகம் சுளித்து செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், பொதுப்பணித் துறை இணைந்து, புதிய சுகாதார தூய்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

தூய்மை நீலகிரி, தூய்மை ஊட்டி என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், முறையாக செயல்படுத்தாததால், நடைமுறையில் வெற்றி பெறாமல் உள்ளது. 

இதை தவிர்க்க, மக்கள் அதிகம் திரளும் இடங்களில் இலவச கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்;
தற்போது உதகை நகராட்சி முலம் சில இடங்களில் நவீன முறை கழிப்பிடம் அமைக்க படுவதாக அறிந்தோம் அவையும் கட்டணத்தை எதிர்பார்த்து அமைக்க பட்டால் அதன் பயன் இல்லாமல் மீண்டும் பழையபடி தெருவோரங்கள் எல்லாம் கழிப்பிடமாக மாறிவிடும்
புதிய கழிப்பிடங்கள்  குறிப்பாக ஏ.டி.சி., அருகில்லை,  பஸ் ஸ்டாண்ட் சாலை,  மாவட்ட கலெக்டர் அலுவலகப்  பகுதி, உதகை  மார்க்கெட் பகுதிகளில் அமைக்கபட  வேண்டும்.

புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டாலும், கட்டணமின்றி பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள கழிப்பிடங்களில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். கழிப்பிடங்கள், லாப நோக்கில் செயல்படுத்தப்படும் பட்சத்தில், சுகாதாரமான நீலகிரியை உருவாக்க முடியாது.

கழிப்பிடப் பராமரிப்பை, நகராட்சி தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். தற்போது, பல மாவட்டங்களில்  பெரிய  பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கபட்டுள்ளன.  திருச்சி மதுரை உட்பட மாநகராட்சிகளில், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன;  இங்கு பணிபுரியும் சுகாதார ஊழியருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது; 

கழிப்பிடத்தை பயன்படுத்த  மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.  இதே போல், நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைத்து தன்னார்வ அமைப்புகளிடம் பராமரிக்க வழங்கலாம்; அல்லது, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனி ஊழியர் நியமித்து பராமரிக்கலாம். சுகாதார மாவட்டமாக நீலகிரியை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்

--
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center


Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250  9488 520 800
www.cchepeye.blogspot.com
www.fedcons.blogspot.com
www.consumernlg.blogspot.com

இன்று சர்வதேச ஓசோன் தினம் sep 16

இன்று சர்வதேச ஓசோன் தினம் sep 16

சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது ஓசோன் படலம். இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்., 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

ஓசோன்: ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்து ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.

விளைவுகள்: கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓசோன் படலம் பாதிக் கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் கடல்நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்படும். இமய மலையில் உள்ள பனிக் கட்டிகள் உருகும். புற ஊதா கதிர்களால் தோல் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஓசோனின் எதிரி எச்.சி.எப்.சி.,: ஓசோனில் துளை ஏற்படுத்தக் கூடிய, குளோரோபுளூரோ கார்பன்களுக்கு (சி.எப்.சி.,) நாம் விடை கொடுத்துவிட்டோம். ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகள் சி.எப்.சி.,யின் உற்பத்தி, வினியோகம் மற்றும் பயன் படுத்துதல் ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தி விட்டன. ஏர்கண்டிஷனர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப்பெட்டிகள், தீ அணைப்பான்கள், ஸ்பிரேக்கள் உள்ளிட்ட அழுத்தப்பட்ட திரவம், வாயுக்களை வெளி யேற்றும் கருவிகளில் சி.எப்.சி., பயன்படுத்தப் பட்டது. இந்த சி.எப்.சி.,க்கு மாற்றுப் பொருளாக ஹைட்ரோ குளோரோபுளூரோ  கார்பன்கள் (எச்.சி.எப்.சி.,) பயன்படுத்தப்படுகின்றன. சி.எப்.சி.,யின் மாற்றுப் பொருளான எச்.சி.எப்.சி.,யில் 40 வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஓசோனை பாதிக்கக் கூடியவைதான். ஆகவே, இவற்றையும் பல்வேறு கட்டங்களில் பயன் பாட்டிலிருந்து நீக்கவிட, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓசோனாக்ஷன் அலுவலகம் கருதுகிறது. இதற்கான கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான சட்டமியற்றும் வழிமுறைகளை இந்நிறுவனம் நாடுகளுக்கு அளிக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, ஓசோன்செல், 2008ம் ஆண்டிலிருந்தே சி.எப்.சி., வெளியேற்றத்தை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது எச்.சி.எப்.சி.,யையும் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஓசோன் படலம் காக்கப் படும் பட்சத்தில், மோசமான வானிலை விளைவுகள் தடுக்கப்படும்.

பாதுகாப்பது எப்படி? * அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்- டை- ஆக்சøடு அளவை குறைக் கலாம்.

* சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பங்களை மட்டும் பயன் படுத்தவேண்டும்.

* ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

* பருவநிலை மாறுபாடு குறித்த உறுதியான திட்டங்களை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து செயல் படுத்த வேண்டும்.

* ஓசோனின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாக்க இந்நாளில் முயற்சி எடுக்க வேண்டும்

சர்வதேச ஓசோன் தினம் sep 16

உலகமே 'ஓசோன்' ஓட்டையால் வெப்பம் அதிகரிப்பதை எதிர்த்து ஓங்கி குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இயற்கை வளம் நிறைய பெற்ற நாம் அதை உணர்ந்துள்ளோமா என்பது சந்தேகமே. அடர்ந்த மரங்களால், பரந்த வனங்களை வெட்டி வீழ்த்தியதே, தட்ப வெப்ப நிலை தடுமாற்றத்திற்கு காரணம் என யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. உணர்ந்திருந்தால் விண்ணுயர்ந்த மரங்களையும், விலைமதிப்பில்லாத உயிரினங்களையும் கொல்வதையே தொழிலாக கொண்டிருப்போமா? தமிழகத்தின் மழை பொழிவுக்கும், வளம் செழிக்கவும் காரணமான மேற்கு தொடர்ச்சி மலையில் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன.

வாழ்க்கை பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் இந்த வனவளம் பற்றி, 'வைல்ட் டிரஸ்ட் ஆப் இந்தியா' அமைப்பின் ஆலோசகர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது: மேற்கு மலைத் தொடரின் மொத்த நீளம் 1600 கி.மீ., பரப்பளவு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 8 சதுர கி.மீ., இத்தொடரில்தான் கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, கபினி, வைகை, தாமிரபரணி என பல நதிகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள உயர்ந்த சிகரங்கள் ஆனைமுடி (2695 அடி), தொட்டபெட்டா (2637). பலதரப்பட்ட தாவரங்கள், முட்புதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என உயிரினங்கள் இங்கு உள்ளன. இலையுதிர்காடுகள், ஊசியிலை காடுகள், அடர்காடுகள், சோலை காடுகள், பசுமைமாறா காடுகள் என உயிரினங்களின் வாழ்விடங்களும் உள்ளன. இம்மலைத் தொடரில் ஆண்டுக்கு நான்கைந்து மாதங்களில் 1000 முதல் 9 000 மி.மீ., அளவு மழை பொழிகிறது. 25 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. இங்கு 4000க்கும் மேற்பட்ட தாவரங்கள்; 300 வகையான பாசிகள்; 800 வகையான மரப்பாசிகள்; 600 வகை பூஞ்சைகள் உள்ளன. இதில் 56 வகை தாவரங்கள் வேறெங்கும் இல்லாத வகையில், இம்மலைத் தொடரில் மட்டுமே காணப்படுகின்றன. 1500 பூக்கும் தாவரங்களில் 38 சதவீதம் இங்கு மட்டுமே உள்ளவை. 63 சதவீத மரவகைகள் இங்குள்ளன.
விலங்குகளை பொறுத்தவரை, பாலூட்டி வகைகள் 120; நீர்நில வாழ்வன 121; 600 வகை பறவைகள்; ஊர்வனவற்றில் 157 வகை; மீன் இனங்களில் 218 வகை இங்கு வாழ்கின்றன. இந்தியாவில் உள்ள 9 வகை மான்களில் நான்கு இங்குண்டு. இதில் மிகச்சிறிய 'கூரை மன்னி', மிகப்பெரிய வரையாடு இங்குதான் உலவுகின்றன. இந்தியாவில் உள்ள ஒரே ஒரு வகை யானை, இங்கும் உள்ளது. காட்டுப் பன்றி, கீரி, நீர்நாய், மரநாய் போன்ற இனங்களைச் சேர்ந்த 31 வகைகளில் 12 இங்கு உள்ளன. 15 வகை பூனை இனங்களில் ஐந்து வகை இம்மலைத் தொடரில் உள்ளது. உலகளவில் உள்ள 4 வகை கழுதைப் புலி வகையில் ஒரு வகை இங்குள்ளது. ஆறுவகை நரி, நாய், ஓநாய் போன்றவற்றில் ஐந்து வகை இங்குள்ளன. நான்கு வகை கரடிகளில் ஒன்று, இரண்டு வகை முயல்களில் ஒன்று இங்குள்ளது. இந்தியாவில் உள்ள 15 குரங்கு வகைகளில் ஐந்து இங்கு உள்ளன. 218 மீன்வகைகளில் 53 சதவீத மீன் வகைகள் மேற்கு மலைத் தொடருக்கே உரியவையாக உள்ளன.
மலைவளம் காப்போம்: இந்த மலைவளம் காக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம். நல்ல அழகிய சுற்றுப்புறச் சூழலுக்கு இது அத்தியாவசியம். தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமா? அதற்கும் மலைவளமே காரணம். மலைவளம் நன்றாக இருந்தால்தான் அனைத்து உயிரினங்களும் சமநிலையில் இருக்கும். புல், பூண்டு முதல் விலங்குகள் வரை உயிரின பரவல் முறையாக இருந்தால்தான், உயிரின இயக்கமும் முறையாக இருக்கும். மரங்கள் வளரும். மழை கிடைக்கும். இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள் நிறைந்துள்ளன. மிளகு, அரிசி, காட்டு மஞ்சள், முருங்கை போன்ற மலைத் தொடர்பான இயற்கை தாவரங்கள் உள்ளன. இதுபோன்ற தாவர வகைகளின் 'ஜீன்' பிரித்து தரமான தாவரங்களை உருவாக்கி, மனிதனுக்கு தேவைப்படும் வகையில் அவற்றை பயன்படுத்தலாம்.
காடுகளுக்கான பிரச்னைகள்: இதுபோன்ற மலைவளம் நிறைந்த பகுதி யில் மனிதர்கள் வேட்டையாடுகின்றனர். விதிமுறைகளை புறந்தள்ளி விலங்கு, பறவை, தாவரங்களை அழிக்கின்றனர். காட்டுத் தீயை உருவாக்கி வனப்பகுதியையே வறட்சிப் பகுதியாக்கி விடுகின்றனர். எழிலார்ந்த பகுதிகளில் சுற்றுலா தலங்களையும், கல்வி நிறுவனங்களையும் ஏற்படுத்தி காட்டு வளத்தையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துகின்றனர். பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைகின்றன. மண்வள மேம்பாடு, உயிரின பரவல் தடுக்கப்படுகிறது. புதிய, புதிய வழித்தடங்களை அமைப்பதால் வன உயிரினங்கள் நடமாட்டம் தடுக்கப்படுகிறது. இயற்கையான சூழலில் இணைந்து வாழவேண்டிய விலங்குகள், வனத் தீவுக்குள் தனியாக காலந்தள்ளுகின்றன. இதனால் விலங்குகள் வாரிசுகளை உருவாக்குவதில் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் சுற்றுச் சூழ்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும். நாளடைவில் தட்பவெப்ப நிலையும் பாதித்து, எதிர்கால சந்ததிகளுக்கு இன்னல் பல விளைவிக்கும். இதை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
என்ன செய்யலாம்? காடுகள், அவற்றின் வளம், பயன் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், சுற்றுச் சூழல் மேம்பாட்டு குழுக்களை ஏற்படுத்த வேண்டும். காட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மூலம் இதை சாத்தியமாக்கலாம். விலங்குகள் உண்ணாத தாவரங்களை பயிரிடலாம். விடுதிகளில், வீடுகளில் விறகு பயன்பாட்டை குறைத்து, 'பயோகாஸை' அதிகரிக்க வேண்டும். அதற்கு மானியம் தருவதை அதிகரிக்க வேண்டும். காட்டை நம்பியுள்ள மக்களுக்கு வேறு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் உள்ள மாநில அரசுகள் ஒன்றிணைந்து வன விலங்குகளை காக்கவும், மரங்கள் வெட்டுவதை தடுக்கவும் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.

2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in

2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in


 CONSUMER RIGHTS 2

2011 (184) ▼ January ► December http://cchepeye.blogspot.in

2011 (184) ▼ January ► December