Sunday, April 4, 2010

லஞ்சம் ஒழிய புதிய ‘போர்’ தேவை

லஞ்சம் ஒழிய புதிய ‘போர்’ தேவை
 முன்னாள் மத்திய அரசு செயலர் அம்புரோஸ் பேச்சு
 
ஊட்டி, ஏப். 5:
லஞ்சத்தை ஒழிக்க மக்கள் புதிய ‘போரை‘ துவக்க வேண்டும் என உலக நுகர்வோர் தினத் தை முன்னிட்டு நடந்த சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டத்தில் முன் னாள் மத்திய அரசு செயலர் அம்புரோஸ் கேட்டு கொண்டார்.
மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்கள் உலக நுகர்வோர் தினத்தை முன்னி ட்டு சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. உதகை மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
உந்துனர் அறக்கட்டளை அறங்காவலரும், முன்னாள் மத்திய அரசு செயலாருமான அம்புரோஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:
சமூக நலனில் அக்கரை கொண்டோர் தற்போது 10 முதல் 15 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் தான் சமூக மாற்றம் என்பது பெரும் கேள்வி குறியாக உள்ளது. இன்று நுகர்வோர் தினம் பல நிலைகளில் அனுசரிக்கப்படுகிறது. ஆடம்பரமற்ற நுகர்வு அவசியத்தை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். அதிக ஆசை, பணத்தை பல மடங்காக்கும் திட்டம் என கூறி ஏமாற்றி வருகினறனர். பணத்தை முதலீடு செய்வது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பணத்தை முதலீடு செய்யும் முன் அவை சிறந்த நிறுவனமான என யோசிக்க வேண்டும். அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்கள் அளிக்காத வட்டி யை, பாதுகாப்பை, உத்திரவாதத்தை பிற நிறுவனங்கள் அளிக்க இயலாது. விளம்பரத்தில் கூறுவதை எந்த தனியார் நிறுவனமும் செய்திருக்காது. காப்பீடு செய்ய தற்போது பல நிறுவனங்கள் முளைத்துள்ளன. முன்னனி நிறுவனங்கள் பெயரில் சில போலி நிறுவனங்களும் உண்டு. முகவர்களிடம் உறுதிபடுத்தி பணம் செலுத்த வேண்டும். விளம்பரங்களின் உண்மை தன்மைகளை ஆராயும் பொறுப்பு நுகர்வோர்களுக்கு உண்டு. கலப்படம், தேவையற்ற ஊட்டச்சத்து என்ற பெயரில் விற்பனை போன்றவை நுகர்வோர்களை ஏமாற்றும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
நுகர்வோர்கள் தரமான பொருட்களை வாங்க நுகர்வோர் அமைப்புகள் வழிகாட்டியாக அமைய வேண்டும். தெளிவில்லா நுகர்வோர் சமுதாயம் தெளிவுற செய்யும் பணி நுகர்வோர் அமைப்புக்களுடைதாகும்.அனைத்து துறைகளிம் லஞ்சம் தலை தூக்கியுள்ளது. இதனை ஒழிக்க வேண்டும். லஞ்சத்தை ஒழிக்க மக்கள் புதிய போரை துவங்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
nanri dinakaran