Sunday, April 4, 2010

லஞ்சம் ஒழிய புதிய ‘போர்’ தேவை

லஞ்சம் ஒழிய புதிய ‘போர்’ தேவை
 முன்னாள் மத்திய அரசு செயலர் அம்புரோஸ் பேச்சு
 
ஊட்டி, ஏப். 5:
லஞ்சத்தை ஒழிக்க மக்கள் புதிய ‘போரை‘ துவக்க வேண்டும் என உலக நுகர்வோர் தினத் தை முன்னிட்டு நடந்த சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டத்தில் முன் னாள் மத்திய அரசு செயலர் அம்புரோஸ் கேட்டு கொண்டார்.
மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்கள் உலக நுகர்வோர் தினத்தை முன்னி ட்டு சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. உதகை மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
உந்துனர் அறக்கட்டளை அறங்காவலரும், முன்னாள் மத்திய அரசு செயலாருமான அம்புரோஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:
சமூக நலனில் அக்கரை கொண்டோர் தற்போது 10 முதல் 15 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் தான் சமூக மாற்றம் என்பது பெரும் கேள்வி குறியாக உள்ளது. இன்று நுகர்வோர் தினம் பல நிலைகளில் அனுசரிக்கப்படுகிறது. ஆடம்பரமற்ற நுகர்வு அவசியத்தை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். அதிக ஆசை, பணத்தை பல மடங்காக்கும் திட்டம் என கூறி ஏமாற்றி வருகினறனர். பணத்தை முதலீடு செய்வது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பணத்தை முதலீடு செய்யும் முன் அவை சிறந்த நிறுவனமான என யோசிக்க வேண்டும். அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்கள் அளிக்காத வட்டி யை, பாதுகாப்பை, உத்திரவாதத்தை பிற நிறுவனங்கள் அளிக்க இயலாது. விளம்பரத்தில் கூறுவதை எந்த தனியார் நிறுவனமும் செய்திருக்காது. காப்பீடு செய்ய தற்போது பல நிறுவனங்கள் முளைத்துள்ளன. முன்னனி நிறுவனங்கள் பெயரில் சில போலி நிறுவனங்களும் உண்டு. முகவர்களிடம் உறுதிபடுத்தி பணம் செலுத்த வேண்டும். விளம்பரங்களின் உண்மை தன்மைகளை ஆராயும் பொறுப்பு நுகர்வோர்களுக்கு உண்டு. கலப்படம், தேவையற்ற ஊட்டச்சத்து என்ற பெயரில் விற்பனை போன்றவை நுகர்வோர்களை ஏமாற்றும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
நுகர்வோர்கள் தரமான பொருட்களை வாங்க நுகர்வோர் அமைப்புகள் வழிகாட்டியாக அமைய வேண்டும். தெளிவில்லா நுகர்வோர் சமுதாயம் தெளிவுற செய்யும் பணி நுகர்வோர் அமைப்புக்களுடைதாகும்.அனைத்து துறைகளிம் லஞ்சம் தலை தூக்கியுள்ளது. இதனை ஒழிக்க வேண்டும். லஞ்சத்தை ஒழிக்க மக்கள் புதிய போரை துவங்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
nanri dinakaran

1 comment:

  1. ஊட்டி:மக்கள் மையங்கள் அமைக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
    தமிழகத்தில், உந்துனர் அறக்கட்டளை சார்பில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மையங்கள் செயல்படுகின்றன. மக்களாட்சியில் மக்களை மையப்படுத்தவும், குடிமக்கள் அறிவும், துணிவும், பரிவும் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் செயல்படுகிறது.
    மையங்கள், பல அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நலனுக்கு இயற்றப்படும் பல சட்டங்களும், திட்டங்களும் கடைசி தர மக்களுக்கு சென்றடைவது இல்லை.

    அரசின் திட்டங்களை அணுகி பெறவும், சட்டங்களை அறிந்துக் கொள்ளவும், விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் பாதிக்கப்படும்போது நிவாரணம் பெறும் நடைமுறைகளையும், சுய முன்னேற்றத்துக்கு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது. அரசு திட்டங்கள், பாதிப்புக்கு நிவாரணம் பெறும் வழிமுறைகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற உதவும் வழிகாட்டும் மையமாக உள்ளது. மக்கள் மையங்கள், அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இணைந்து செயல்பட வழி வகுக்கிறது.

    நடப்பாண்டு, கல்வி உரிமை சட்டம், நீர் வளம், மின் சிக்கனம், பொது விநியோகம், உள்ளாட்சி உட்பட வகைகளில் கவனம் செலுத்தி, முக்கியத்துவம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    இதுபோன்று செயல்பட விரும்பும் தன்னார்வ அமைப்புகள், மக்கள் மையம் அமைக்க, மக்கள் மையம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், வணிக வளாகம், பந்தலூர் அல்லது மக்கள் மையம், வசம்பள்ளம், ஓட்டுப்பட்டறை, குன்னூர் அல்லது, மக்கள் மையம், ஜெயா காம்ளக்ஸ், நொண்டி மேடு, ஊட்டி முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிப்போர், தங்களது அமைப்பின் பெயர், முகவரி, செயல்பாடுகள் குறித்த விபரங்களோடு, வரும் 30ம் தேதிக்குள் (நாளை) விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பங்கள், மக்கள் மையங்களின் மக்கள் மைய திட்ட அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட குழு நேரடி ஆய்வுக்கு பின், மக்கள் மையம் அமைக்க பரிந்துரைக்கப்படும். விபரங்களுக்கு, 94898-60250, 94429-74075 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    ReplyDelete